+91 978 755 7011 / +91 978 757 7011
அருள்மிகு மலையாண்டி சங்கிலி கருப்பு சீலக்காரி அம்மன் துணை
அருள்மிகு ஓம் பாதாள செம்பு முருகன் துணை
நமது பாதாள செம்பு முருகன் கோவிலில் மூலவரோ, உற்சவமூர்த்தியோ இல்லை. முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த இடத்தில் கோவில் இருந்ததாக சொல்லப்பட்டதன் அடிப்படையில் போகர் சித்தரின் அவதாரமான திருக்கோவிலூர் சித்தரால் உருவாக்கப்பட்டு, தற்போது நாம் கண்டு வழிபடும் கோவில் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டு, சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. தல விருட்சமாக மலை நெல்லி உள்ளது. வம்சா வழியாக வழிபட்ட இடத்தில் நமது பாதாள செம்பு முருகன் வடிவமைக்கப்பட்டு, இன்று அருளை வாரி வழங்கும் வள்ளலாக நாம் உணர்ந்து வழிபட்டு மகிழ்கிறோம்.
இந்தக் கோவிலானது கந்தமாறன் வழியில் வந்த, பரம்பரை அறங்காவலர்களின் ஒருவரான ஐயா அவர்களின் முயற்சியால் 2021 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் நான்காம் தேதி 21.08.2021 குடமுழுக்கு செய்யப்பட்டு, அதனை ஒட்டி மண்டல பூஜைகளும் நடைபெற்றன. இக்கோவிலானது முற்றிலும் தனிப்பட்ட வம்சா வழியினரின் கட்டுப்பாட்டில் இருந்து வழிப்பாட்டுச் சடங்குகள், பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் விரத முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலயத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுங்கள்
இறைவனுக்கு எப்படி பூ மாலைகள் சாற்றி வழிபடுவது வழக்கமோ அதேபோல பாதாள செம்பு முருகனுக்கு பக்தர்கள் இன்றல்ல தொன்று தொட்டு செவ்வாய் பகவானுக்கு உரிய கருங்காலி மாலைகள் கருங்காலி வேல் போன்றவை முருகனுக்கு சார்த்தி பூஜை செய்து பயன்பெற்று வருகின்றனர்…!
சுத்தமான கருங்காலி மாலைகள் கருங்காலி பொருட்கள் திருக்கோயில் வளாகத்தை விற்பனை செய்யப்படுகிறது. கருங்காலி மாலையில் மணிகள் 27,54 மற்றும் 108 என்ற எண்ணிக்கையில் கோர்த்து வைக்கப்பட்டிருக்கும் அவற்றில் தனித்து உயர்ந்திருக்கும் ஒரு மணியானது மேரு என்று சொல்லப்படும். அமானுஷ்யமான சக்திகளை அடைய விரும்புபவர்கள் மனிதன் அல்லது விலங்குகளின் எலும்புகளால் தயாரிக்கப்பட்ட ஜெப மாலைகளை உபயோகித்து கொள்வார்கள்.
ஆனால் சாமானிய மக்கள் இறைவனின் அருள் பெற பஞ்சபூதங்களின் துணையை பெற கருங்காலி மாலைகள் உதவி செய்கின்றன. எதிர்மறை சக்திகளை விலக்கவும் இக்கருங்காலி மாலைகள் பயன்படுகின்றன…! கருங்காலி மாலைகள் மன உறுதியையும். ஆன்மீக சக்தியையும் வழங்கும் மன ஒருமையோடு உடலுக்கு குளிர்ச்சி தந்து மன இறுக்கத்தை விலக்கி உள்ளுணர்வை மேம்படுத்தும்.
ரத்த அழுத்தம் மற்றும் ஆகியவற்றை தவிர்க்க உதவும். உடலில் வெப்பத்தை சரியாக பராமரிப்பதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் அடங்க இக் கருங்காலி மாலைகள் அமைகின்றன. எனவே இது ஆன்மிக முன்னேற்றத்திற்கு பயன்படுவதாக ஆன்மீக சாதகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். பொருளாதார முன்னேற்றத்தை தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் இது போன்ற கருங்காலி மாலைகள் முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது…!! நல்ல எண்ணங்கள் உருவாக்கவும் அவற்றை செயல்முறைப்படுத்தும் திறனை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் கருங்காலி மாலைகள் கருதப்படுகின்றன.
பாதாள செம்பு முருகன் சன்னதியில் சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே நாட்டிற்காக போர்புரிந்த போர்வீரர்களுக்கும்,இன்றைய பாரத நாட்டைக்காக்கும் இராணுவ வீரர்களுக்கும், பரிவட்டம் கட்டி, முதன்மை மரியாதை செய்வது ஆலய நிர்வாகத்தின் மரபாக இருந்து வருகிறது…!
நாம் வாழும் பூமிப் பகுதியே எல்லாவற்றையும் விட வலிமையானது.பாதாளம் என்றால் தமிழில் பல்வேறு பொருள்கள் உண்டு.ஒன்று அளவு கடந்தவன் என்றும்,மற்றொன்று வலிமை மிகுந்தவன் இராகு அந்த ஆக ஆற்றல்கள் அதிகமுள்ள நமது பாதாள செம்பு முருகனை வழிபடுவதால் நமது தீவினைகள் தொலைந்தோடும் என்பதே உண்மை…
நமது செம்பு முருகனின் மேனியைத் தழுவிய கருங்காலி மாலைகளை வாங்கி பாதாள செம்பு முருகனுக்கு சார்த்தி வழிபட முடியாதவர்கள் அல்லது வாங்கி அணிந்துக்கொள்ள முடியாதவர்கள், முருகனின் அருட்பார்வையில் விழ மிக எளிய மற்றும் ஆண்டாண்டாய் ஐதீகமாய் கடைப்பிடிக்கும் செயலைச்செய்தால் கூட போதுமானது.அது என்னவென்றால் கோவில் எல்லையான இராமலிங்கம்பட்டி ஊர் ,எல்லைப்பட்டி .பகுதியிலிருந்து மௌனமாக வந்து முருகனை மனமுருகி வழிபட்டு பிறகு வெளியில்வந்து இராமலிங்கப்பட்டி ,எல்லைபட்டி வரை ஒரு வார்த்தைகூட பிறருடன் பேசிக்கொள்ளாமல் மோனநிலை மௌனத்தை கடைப்பிடித்தாலே போதுமானது. கருங்காலி மாலைகளை அணிந்த மற்றும் முருகனுக்கு சார்த்திய பலனுக்கு இதுவும் ஈடாகும் உங்கள் மனதில் நினைத்த வேண்டுதலும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை…!
திருக்கோவிலூர் சித்தர் இங்கு வழிபாடு செய்த பொழுது பறவைகள், விலங்குகள் கூட சலனம் இன்றி சத்தம்மிடாமல் காத்திருக்கும் என்ற ஆவணங்கள் நம்மிடம் விளக்குகின்றன.அப்படி சத்தம் இன்றி மௌனத்தில் திருக்கோவிலூர் சித்தர் பூஜித்த பாதாள செம்பு முருகனிடம் சத்தம் இன்றி அமைதியாய் சரண் அடைய வளாகத்தில் அமைதி காக்கும் சுழலை உருவாக்க வேண்டும்..!
மௌன்னத்தினை அனுபவபூர்மாக உணர்ந்த பக்தர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இறையனார் எம்பெருமான் பாதாள செம்பு முருகனின் ஆலய வளாகத்தில் அமைதி காத்து அவனின் அருளை முழுமையாகப் பெற்று நலம் எய்துகின்றனர்…
பக்தர்களாகிய தாங்களும் இவ்வழியைப் பின்பற்றினால் முருகப்பெருமானின் அருட்பார்வை நிச்சயம் பெறவியலும்…
ஆகவே மிக எளிய இந்த மோனநிலை மௌனத்தை குரு உபதேசம் போல் எண்ணி நமது் ஐயன் பாதாள செம்பு முருகனின் அருளைப் பெற்றுய்யுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அன்றிலிருந்து இன்றும் கூட பல சித்தர் பெருமக்கள் பலரும் ப்ரபஞ்ச ஆற்றலை வாங்கி சித்து நிலையில் உயர்வடைய,நீர் மற்றும் காடுகள் சூழ்ந்த பகுதிகளில் தங்களின் தவ வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வண்ணமே இந்த தலமும் இருந்த காரணத்தால் இங்கு இறைசக்தியும்,ப்ரபஞ்ச சக்தியும் மேம்பட்ட நிலையில் இருப்பதை பக்தர்கள் உணர்ந்த படியால் இக்கோவிலுக்கு வருவோரின் எண்ணிக்கை பலவாறாகப்பெருகி, அவர்களின் வாழ்வும் வளமுற்று வருகிறது. இங்ஙனம் புகழ்வாய்ந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ,தாங்கள் வரும் வாகனங்களை ,வாகனம் நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் தாங்களாகவே முன்வந்து வரிசையாக நிறுத்திவிட்டு வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சாலை ஓரங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும்,பொதுமக்களுக்கும்,கோவில் நிர்வாகத்திற்கு ஏற்படும் மன உளைச்சலையும்,கருத்தில் கொள்கின்ற இந்த உயரிய குணம் என்றைக்கும் அவர்களின் வாழ்வை சிறப்பிக்கும். மேலும் இப் பண்பினால் செம்பு முருகனின் அருளை முழுவதுமாக பெறவியலும். அதே போல் அமைதியாக இறைவழிபாடு செய்யும் நோக்கத்தில் வரும் பக்தர்கள் அதற்கு இடைஞ்சல் தரும் அலைபேசிகளை ஒலி எழுப்பா நிலையில் ( silent mode) பிறரின் தூண்டுதல் இன்றி வைத்துக்கொள்வதும் சிறப்பு.முருகனின் திருமேனியை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதும் முறையற்றது என்பதை அறிந்திருத்தல் நலம். மாற்றுத்திறனாளிகள், மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் திருக்கோவில் நிர்வாகிகள் வழிபட தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாராயினும் ,கண்டிப்பாக இலவச தரிசன வரிசையிலேயே வர வேண்டும். இதை கட்டளையாகக் கருதாமல்,நிலமையின் சிக்கலை அறிந்து கோவில் நிர்வாகத்துடன் நட்போடு கைகோர்த்து பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
பாதாள செம்பு முருகன் திருக்கோயில் போகர் மடாலயம் இராமலிங்கம்பட்டி ரெட்டியார் சத்திரம் திண்டுக்கல் ... நன்றி
இப்படிக்கு
நிர்வாகம்
பாதாள செம்பு முருகன் கோவில்.
Not a member? Create an account
Already got an account? Sign in here