எல்லை இல்லா மகிழ்ச்சியோடு பக்தர்களாகிய நீங்கள் முருகப்பெருமானைக் காண ஓடி வருகிறீர்கள்.உங்களில் பலர் வெளியூர்களிலிருந்து வந்து இரவு தங்கி ,முருகனை விடியற்காலைப் பொழுதிலேயே வணங்கித்துதிக்க விரும்பி வந்து எங்களிடம் தங்க அனுமதி கோருகிறீர்கள்.இது வயல் சூழ்ந்த பகுதி.அந்த இடத்தின் தன்மைக்கு ஏற்ப புழு,பூரான் (ஏன் பாம்புகள் கூட ) நடமாடும் நிலை.எனவே அருள்கூர்ந்து வெளியூர் பக்தர்கள் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் அறை எடுத்து தங்கிவிட்டு விடிந்த பின் முருகனை தரிக்க வருமாறு மிகவும் பக்தியுடன் கேட்டு கொள்கிறோம் …!
மேலும் காவல்துறையின் நெறிக்காட்டுதலின் படியும்,தனிப்பட்ட சிலபல அச்சுறுத்தல் காரணமாயும் பக்கர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு பக்தர்கள் கோவில் நிர்வாகத்தோடு ஒத்துழைக்க வேண்டுகிறோம்…!
பாதாள செம்பு முருகனின் அருள் மழை உங்கள் அனைவரையும் நனைக்க ப்ரார்த்திக்கிறோம்…!
நமது ஆலய வளாகத்தில் வெளியூர் பக்தர்கள் இரவு வேளைகளில் வந்து தங்குவதற்கு உரிய வசதிகளோ,,ஏற்பாடுகளோ தற்சமயம் நடைமுறைப்படுத்த இயலாது.மேலும் வெகு சிறிய எண்ணிக்கையில் கழிவறைகள் இருப்பதால் இரவில் தங்க எண்ணாமல், தங்கள் விடுதிகளில் தங்கிவிட்டு விடிந்தபின் வந்திருந்து சாமி தரிசனம் ஆற்றினால் நலமாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்…!